காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தீபாவளி ஸ்பெஷலாக வித்தியாசமான சீப்பு சீடை.. வீட்டிலேயே அற்புதமாக செய்து அசத்துங்கள்..!!
தீபாவளி ஸ்பெஷலாக வித்தியாசமான சீப்புசீடை எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
தீபாவளி என்றாலே மக்கள் அனைவரும் பலகாரங்கள் சுட்டு வெடிவெடித்து மகிழ்வது வழக்கமான ஒன்றே. ஆனால் எப்பொழுதும் போல முறுக்கு, லட்டு, ஜாங்கிரி உள்ளிட்டவற்றை செய்யாமல் புதிதாக சீப்பு சீடை முயற்சி செய்துபாருங்கள்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - இரண்டு கப்
கடலை மாவு - அரை கப்
உளுத்த மாவு - அரை கப்
கெட்டியான தேங்காய் பால் - அரைக்கப்
வெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
சுடுநீர் - தேவைக்கேற்ப
செய்முறை :
★ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்த மாவு மற்றும் கடலை மாவினை சேர்த்து அதனுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.
★அதனுடன் தேங்காய்பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். சிறிதளவு சுடுநீர் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.
★பின் முறுக்கு அச்சு எடுத்துக்கொண்டு தட்டையாக சீப்பு போல இருக்கும் அச்சை பொருத்தி, அதில் மாவை வைத்து ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போட்டு பிழிய வேண்டும்.
★அதை சிறுதுண்டுகளாக வெட்டி உருட்டி கொள்ள வேண்டும். ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கலந்ததும் உருட்டி வைத்துள்ளதை போட்டு எடுத்தால் சீப்பு சீடை ரெடி.