மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சமைக்கும் உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் இப்படி பண்ணுங்க!" டிப்ஸ் இதோ!
சமையலில் கலக்கும் இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள பல குறிப்புகளை இங்கு காண்போம். சமைப்பது போலவே சமையலில் பயன்படுத்தும் பொருட்களை கெட்டுப்போகாமல் பாதுகாப்பதும் முக்கியம். சில சமையலுக்கு தேவையான அத்தியாவசிய குறிப்புகளை இங்கு காண்போம்.
காரக்குழம்பு செய்யும்போது காரமோ, உப்போ கூடிவிட்டால், சிறிதளவு சின்ன வெங்காயத்தை எண்ணையில் வதக்கி குழம்பில் சேர்க்கலாம். மேலும் தயிர் அல்லது தேங்காய்ப்பாலை குழம்பி கலந்து கொதிக்க விடலாம். உருளைக்கிழங்கு குழம்பில் உள்ள காரத்தையும், உப்பையும் உறிஞ்சிக்கொள்ளும்.
எனவே குழம்பில் உப்பு, காரம் கூடிவிட்டால், ஒரு உருளைக்கிழங்கு அல்லது சவ் சவ் காயை துண்டுகளாக நறுக்கி குழம்பில் போடலாம். மேலும் சாதத்தில் உப்பு கூடினால் எலும்பிச்சை சாறு அல்லது ஆப்பிள் சீடர் வினிகரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
மேலும் பிரியாணியில் உப்பு அல்லது காரம் கூடினால், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி எண்ணையில் வறுத்து பிரியாணியில் சேர்க்கலாம். மேலும் உலர்ந்த திராட்சையை நெய்யில் வதக்கி சேர்த்தாலும், அலலது நாட்டுச்சக்கரை, எலுமிச்சை சாறு கலந்தாலோ பிரியாணியில் உப்பு, காரத்தை குறைக்கலாம்.