மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்க உடம்பில் உப்பு அதிகமாக இருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் வருமா.?
உப்பு தான் நம் உணவின் சுவைக்கு காரணமாக இருக்கிறது. மேலும் நம் உடலுறுப்புகள் சரியாக செயல்படவும் இதிலுள்ள சோடியம் உதவுகிறது. அதேசமயம், சோடியம் அதிகமாகிவிட்டாலும் இதயநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
நம் உடலில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற, நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழம் , வெண்ணெய் , ஆரஞ்சு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை உட்கொள்ளவேண்டும்.
போதுமான அளவு தூங்கி எழுந்து, நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், வெதுவெதுப்பான நீரில் எப்ஸம் உப்பைக் கலந்து நிதானமாக குளிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து குடிக்க வேண்டும்.
ஆப்பிள் சீடர் வினிகர், குடை மிளகாய், கீரைகள், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், மிளகுத்தூள், தயிர், பழச்சாறுகள் உப்பு குறைவான சூப்புகள் ஆகியவற்றை உட்கொள்ளவேண்டும். தண்ணீர் அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் உடலில் உள்ள நச்சு உப்புகள் வெளியேறி உடல் நலம் பெறலாம்