மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினந்தோறும் ஏசியில் இருக்கீங்களா? அதனால் ஏற்படும் பிரச்சனைகள்!
தற்போதைய வாழ்க்கைமுறையில் ஏசியில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆரம்பத்தில் இயந்திரங்கள் குளிர்ச்சியான சூழலில் இருக்கவேண்டும் என்பதற்காக அலுவலகங்களில் ஏசி வைத்தனர்
நாளடைவில் மனிதன் அதற்கு பழகி வீட்டிலும் ஏசி வைக்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ஏற்றாற்போல தற்போதைய தற்போதய தட்பவெட்ப நிலையும் மனிதர்களை ஏசிக்கு அடிமை ஆக்கிவிட்டது. எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காமல் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஏசி அதிகமாக பயன்படுத்துவதால் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி சருமம் வறட்சி அடையும். மேலும், உதடுகளும் உலர்ந்து போய் வெடிப்பு ஏற்பட கூடும்.
ஏசியில் நீண்ட நேரம் இருப்பதினால் வைட்டமின் டி குறைவு ஏற்படுகிறது. விண்டோ ஏசிக்கு அருகே முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் பிரச்னை ஏற்பட்டு மூக்கடைப்பு, தலைவலி, காது வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஏசியில் நீண்ட நேரம் இருப்பதினால் மூட்டுவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். ஏசியில் அதிகநேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவும். அலுவலகத்தில் அதிக நேரம் ஏசியில் இருப்பவர்கள் வீட்டில் ஏசி பயன்படுத்துவதை சற்று தவிர்த்து வந்தால் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். அதேபோல் அதிக நேரம் ஏசியில் இருப்பவர்கள் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மிக அவசியமாகும்.