"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சுவையான கம்பு அடை... வீட்டிலேயே 5 நிமிடத்தில் செய்து அசத்துங்கள்..!
நீரிழிவு நோயை குணப்படுத்தும் சுவையான கம்பு அடை எவ்வாறு சமைப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.
கம்பு உடலில் உள்ள தசைகளில் இறுக்கத்தைக் கொடுத்து பலத்தை அளிக்கிறது. அத்துடன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்துவிடும்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
முட்டைக்கோஸ் - 100 கிராம்
கம்பு - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
துவரம்பருப்பு - கால் கப்
பருப்பு - கால் கப்
மிளகாய் - 8
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 3/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
செய்முறை :
★முதலில் வெங்காயம் மற்றும் முட்டைக்கோஸை, பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★பின் கம்பு, பருப்பு ஆகியவற்றை ஒன்றாக களைந்து குறைந்தது 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
★அடுத்து பெருங்காயம், மிளகாய், உப்பு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
★தொடர்ந்து ஊறிய பருப்பு மற்றும் கம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
★பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கருவேப்பிலை, பெருங்காயம், கடுகு சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
★வெங்காயம் சற்று வதங்கியதும் முட்டைகோஸை சேர்த்து, உப்பு போட்டு மாவில் கலக்க வேண்டும்.
★இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிப்போட்டு எடுத்தால் சுவையான கம்பு அடை தயாராகிவிடும்.