குழந்தைகளுக்கு பிடித்த மாலைநேர ஸ்நாக்ஸ்...வீட்டிலேயே சுவையான நெய் அப்பம் செய்வது எப்படி?..!
பாரம்பரிய பலகாரங்களில் ஒன்றான நெய் அப்பத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்பது குறித்ததுதான் இந்த செய்திக்குறிப்பு.
குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் உடலுக்கு சத்தான உணவுகளை சாப்பிடுவதற்கு குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு பிடித்தவாறு சுவையாக நெய் அப்பம் எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 1
ஏலக்காய் - 4
சமையல் சோடா - 1/4 கால் தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 6 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 250 கிராம்
வெள்ளம் - 200 கிராம்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து, 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
★பின் வாழைப்பழத்தின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
★அடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் பாகுபதத்தில் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
★பின் ஊற வைத்த அரிசியுடன் ஏலக்காய், வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
★அதில் தேங்காய் துருவல் மற்றும் வெல்லப்பாகினை சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு உப்பு, சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
★இறுதியாக குழிப்பணியார சட்டியினை அடுப்பில் வைத்து சூடானதும், நெய் ஊற்றி பின் குழிகளில் மாவை ஊற்றி அப்பத்தின் இருபுறமும் பொன்னிறமாக வருமாறு பொரித்து எடுத்தால் நெய் அப்பம் நிமிடங்களில் தயாராகிவிடும்.