"காய்ச்சலுக்குப் பிறகும் தொடரும் இருமல்! காரணம் என்ன? எப்படி சரி செய்யலாம்?"



Main reason for cough after cure fever

காய்ச்சலும், ஜலதோஷமும் குணமாகிவிட்டாலும், சிலருக்கு ஒரு மாதமானாலும் இந்த இருமல் மட்டும் விடாது உயிரை எடுக்கும். மருந்து எடுத்தாலும் குணமாகாமல் இருக்கும் இந்த இருமலை எப்படி குணமாக்குவது என்று சென்னையை சேர்ந்த பொது மருத்துவர் அருணாச்சலம் கூறுகிறார்.

Cold

தற்போதைய சூழலில் வெளியில் தாக்கம் குறைந்துவிட்டதாலும், தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரித்திருப்பதாலும், தூசு, வாகனப்புகை ஆகியவற்றால் காற்று மேல்நோக்கிப் போகாமல் கீழேயே தங்கிவிடுகிறது. போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது புகையும், தூசியும் நம்மை பாதிக்கும்.

எனவே வாகனங்களில் பயணிப்போர் மாஸ்க் அணிவது, பில்டர் வைத்த ஹெல்மெட் அணிவது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நம்மை சுற்றியுள்ள மாசுபட்ட காற்று தான் நீண்டகால சளிக்கும், இருமலுக்கும் காரணம். ஒவ்வாமையால் ஏற்படும் சளி, இருமல் 3 நாட்களில் குணமாகிவிடும்.

Cold

ஆனால் காய்ச்சல் சரியானபிறகும் இருமலுடன் சளியும் வந்தால் இன்னும் தொற்று குணமாகவில்லை என்று தான் அர்த்தம். எப்போதோ மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை மீண்டும் எடுத்துக்கொள்வதோ, தானாகவே சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பதோ கூடாது.