மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குளிருக்கு இதமாக மசால் வடை குழம்பு எப்படி செய்யலாம்.. பார்க்கலாம் வாங்க.?
மசால் வடையை வைத்து காரசாரமாக குழம்பு செய்யும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் -
சின்ன வெங்காயம் - ஒரு கப், குழம்பு மிளகாய் தூள் - மூன்று டேபிள் ஸ்பூன், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய், புலி தேவையான அளவு
மசால் வடை செய்ய தேவையான பொருட்கள்-
கடலைப்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி
செய்முறை-
முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையில் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம், உப்பு பெருங்காயத்தூள், கொத்தமல்லி போன்றவற்றை போட்டு நன்கு பிசைந்து தட்டி வடையாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றுமொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து உரித்த சின்ன வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும், பின்பு அதில் புலி ஊற்றி மிளகாய் தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ,உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வந்த பின்பு பொறித்து வைத்த மசால் வடைகளை சிறிது நேரம் குழம்பில் போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் சூடான மசால் வடை குழம்பு தயார்.