காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிறுநீரக கற்கள் தோன்றாமல் தடுக்க அருமையான மூக்கிரட்டை சூப்... வீட்டிலேயே செய்வது எப்படி?...!
சிறுநீரக கற்கள் தோன்றாமல் தடுக்க சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் எப்படி தயாரிப்பது என்பது பற்றி தற்போது காண்போம்.
மூக்கிரட்டை கீரை சாப்பிடுவதன் மூலமாக கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கும், சிறுநீரக தொற்று ஏற்படுவது போன்றவைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 1
வெங்காயம் - 1
பூண்டு பல் - 2
மஞ்சள்தூள் - சிறிதளவு
சீரகப் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மூக்கிரட்டை கீரை - 2 கையளவு
செய்முறை :
★முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★பின் மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
★அடுத்து 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும்போது தக்காளி, வெங்காயம் மற்றும் கீரையை போட்டு கொதிக்க விட வேண்டும்.
★பின் கீரை நன்கு வெந்ததும் அதில் சீரகப்பொடி, மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
★நன்றாக கொதித்த பிறகு இறக்கி வடிகட்டி பருகினால் சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் தயாராகிவிடும்.