சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
குப்பை மேட்டில் வளரும் சுண்டைகாயில் இத்தனை நன்மைகளா?!,, என்னன்னு தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!
வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம்.
நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், இவற்றை போக்கும். மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
சுண்டை சமையலுக்கு பயன் படுகிறது மற்றும் பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. மேலும் மூலிகை மருந்துகளிலும் பயன் படுத்தப் படிக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
மேலும் கலோரிகள், கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். சுண்டைக்காயில் உள்ள சபோஜெனின் என்ற ஸ்டீராய்டு உள்ளது.
இது ஹார்மோன் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் திறனைக் கொண்டுள்ளது. எனவே, உலர்ந்த சுண்டைக்காயை மென்று சாப்பிடுவது பெண்களுக்கு ஹார்மோன் ஏற்ற தாழ்வினால் ஏற்படும் மாத விடாய் கோளாறுகளை சரி செய்கிறது.
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.