தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்தச் செடிகள் எல்லாம் மன அழுத்தத்தைப் போக்கும் தெரியுமா.!
தற்போதெல்லாம் இளவயதினர் முதற்கொண்டு அனைவருக்கும் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. மருத்துவங்கள், தெரபிக்கள், ஆலோசனைகள், உணவுக்கட்டுப்பாடு என்று ஏரளாமான வழிகள் மனஅழுத்தத்தை கட்டுபடுத்துவதற்கு உள்ளன.
மன அழுத்தத்திலிருந்து விடுபட, நேர்மறை ஆற்றல் மற்றும் எண்ணங்கள் முதலில் தேவை. அந்த நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சில செடிகள் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ளன. காற்றை சுத்திகரிக்கும் இந்த செடிகள் வீட்டினுள்ளும், வெளியிலும் காற்றில் உள்ள நச்சுக்களை அகற்றுகின்றன.
அந்தூரியம், பீச் மற்றும் லில்லி செடிகள், ஆர்க்கிட் வகையைச் சேர்ந்த இவை அலங்காரச் செடிகளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செடிகளை களிமண் எருவை நிரப்பி கோடைக்காலங்களில் தொடர்ந்து இரண்டு முறையும், கோடையில் மூன்று முறையும் தண்ணீர் விட வேண்டும்.
இந்தச் செடிகளை தினமும் காலையில் எழுந்து பார்க்கும்போது மனதிற்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இந்தச் செடிகள் வளர்வது போல் நாமும் வளர்ந்து முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுக்கும். எனவே இதுபோன்ற செடிகளை வளர்த்து நம் மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவோம்.