தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இளம் வயதில் குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு வரும் பிரச்சினை என்ன தெரியுமா?
தாயாகிவிட்ட இளம் பெண்களுக்கு தங்கள் உடல் கட்டுக்கோப்பு பற்றிய கவலையும், தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பயமும் அதிகம் ஏற்படுகிறது. அந்த கவலையையும், பயத்தையும் வளரவிடாமல் தடுக்கவேண்டும்.
இளம் தாய்மார்கள் மன அழுத்தத்திற்குள் சிக்காமல் இருக்க, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தானே செய்து முடிப்பேன் என்று அடம்பிடிக்கக்கூடாது.
அவர்கள் வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு, குழந்தையை பராமரிப்பதிலும், தன்னை பராமரிப்பதிலும் அவர்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டும். அவர்களுக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும், அதை எல்லாம் சற்று நேரம் ஒதுக்கிவைத்துவிட்டு தியானம் செய்யவேண்டும்.
பிரசவமான ஒருசில நாட்களில் பெரும்பாலான தாய்மார்கள் ‘பேபி ப்ளூ’ என்ற மனோநிலை மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். பொதுவாக பிரசவம் முடிந்த ஒன்றரை மாதம் வரை இந்த மன அழுத்தம் நீடிக்கலாம். பின்பு மனோநிலை இயல்புக்கு திரும்பிவிடும்.
ஆனால் அதுவாகவே நீங்கிவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்காமல், அதனை போக்கும் வழி பற்றி சிந்தித்து, அந்த அழுத்தத்தில் இருந்து தாய்மார்கள் முடிந்த அளவு சீக்கிரம் விடுபட வேண்டும்.
பாதுகாப்பான முறையில் மனைவியை வெளியே அழைத்துச்செல்ல முன்வரவேண்டும். மனைவி குழந்தையோடு கணவரும் பொழுதுபோக்கவேண்டும்.
பிரசவித்த தாய் பாசிட்டிவ்வான சிந்தனைகளை மனதில் உருவாக்கி, எப்போதும் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக்கொண்டால் இந்த மன அழுத்தத்தில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.
பிடித்த தியானத்தை செய்தால், மூளையில் நல்ல மாற்றங்கள் உருவாகும். என்டோர்பின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்து மனதை அமைதியாக்கிவிடும். அதனால் தாய்மார்கள் ஆர்வமாக தியானம் மேற்கொள்ளவேண்டும்.
இன்றைய வாழ்க்கைமுறை எல்லாவிதத்திலும் பெண்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்விதத்தில்தான் இருக்கிறது. அது கடினமில்லை. எளிதுதான். நீங்கள் மனது வைத்தால் போதும்!