சமையலுக்கு நாம் பயன்படுத்தும் புளியில் இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் தகவல் இங்கே.!



puli-tamarind-benefits-tamil

 

நமது வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமானது புளி. 

ரசம், சாம்பார், காரக்குழம்பு வகைகள் என பல குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் புளி, காரக்குழம்பு, கருவாடு போன்ற குழம்புகள் வைக்கப்படும்போது தாராளமாக சேர்க்கப்படும். 

உணவின் கெட்டுப்போகும் தன்மையை அதிகரிக்கும் தன்மை கொண்ட புளியில், ஆண்டி-ஆக்சிடென்ட் நிறைந்து காணப்படுகிறது. 

இதில் இருக்கும் ஹைட்ரோசிட்ரிக் அமிலமானது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவி செய்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது, இதயத்துடிப்பை சமநிலைப்படுத்தும். 

Cooking

அதேவேளையில், புளியின் அளவு அதிகமானால், அது உடலுக்கு பல்வேறு கோளாறுகளையும் கொடுக்கும் என்பதால், அளவுடன் சாப்பிடுவது நல்லது.

கிராமங்களில் ஊர் திருவிழாவின் போது மக்களின் தாகம் அகன்று, உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க மோர், பானகரம் என்ற புளிக்கரைசல் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பானகரம் வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும்.