உப்பை அடுப்பிற்கு பக்கத்தில் வைக்கக்கூடாது? ஏன் தெரியுமா?



Salt dont use in stove side

உலகம் முழுவதும் உணவுப் பொருள்களில் மிக அத்தியாவசியமான பொருளாக பயன்படுவது உப்பு. இதில் தமிழர்கள் உப்பை ஒரு தெய்வமாக பார்க்கின்றனர். அதன்படி உப்பு தொடர்பான பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் உப்பு தொடர்பாக பயன்படுத்திய வழிமுறைகளில் பல அறிவியல் உண்மைகள் மறைந்துள்ளது.

பொதுவாக குப்பை பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்புகாத வகையில் வைக்க வேண்டும் எனவும், அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது என காலம் காலமாக கூறி வருகின்றனர். இதற்கு என்னதான் காரணம் வாங்க தெரிஞ்சுக்கலாம்.

Salt

சிலர் உப்பு பயன்படுத்துவது சுவைக்கு மட்டுமே என நினைக்கின்றனர். ஆனால் உப்பின் உடலுக்கு தேவையான அயோடின் உள்ளது. எனவேதான் உணவில் உப்பு சேர்ப்பது அவசியமாக உள்ளது.

பீங்கான் பாத்திரத்தில் ஒளி உட்புகாத வகையில் வைக்க காரணம் உப்பில் உள்ள அயோடின் மற்ற பாத்திரங்களுடன் வினை புரியக்கூடியது. எனவே இதனை வேறு பாத்திரங்களில் வைத்தால் சூரிய ஒளி பட்டு அயோடின் அழிந்து விடும்.

Salt

அதேபோல் உப்பு பாத்திரத்தை அடுப்பின் அருகில் வைக்கக் கூடாது என சொல்வதற்கு காரணம் அயோடின் வெப்பத்தில் அழியக்கூடியது. எனவே அயோடின் இல்லாத உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுவது பயனற்றது.

அது குறிப்பாக சமைக்கும் போதும் உப்பை உணவு சூடாறிய பிறகு தான் சேர்க்க வேண்டும். ஏனென்றால் சூடு குறைந்த பிறகு சேர்க்கும் உப்பு தான் உடலுக்கு உண்மையான பலன் கொடுக்கும் என கூறப்படுகிறது.