மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரத்த குழாய் அடைப்பை கரைக்கும் சின்ன வெங்காயம் புதினா துவையல்..!
ஜலதோஷம் மற்றும் இதயநோய் வராமல் தடுக்கும் சின்ன வெங்காயம் புதினா துவையல் எவ்வாறு சமைப்பது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
சின்ன வெங்காயத்தை தினமும் சாப்பிடுவதன் மூலம் ஜலதோஷம் வராமல் தடுக்க முடியும். மேலும், உடலில் உள்ள ரத்தகுழாயை அடைக்கும் கொழுப்பினை கரைக்கும் உதவுகிறது. அத்துடன் இதயநோய் வராமல் தடுப்பதற்கு சின்ன வெங்காயம் மற்றும் புதினா உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
புதினா - 1 கைப்பிடி
காய்ந்தமிளகாய் - 12
கறிவேப்பிலை - 1 கொத்து
கல் உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 50 கிராம்
செய்முறை :
★முதலில் புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
★அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நன்றாக கழுவி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
★பின் ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கி, அதில் உரித்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், புதினா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
★தொடர்ந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து இவை அனைத்தையும் நன்றாக வேக வைக்க வேண்டும்.
★வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அதனை ஆற வைத்து, மிக்ஸியில் கல் உப்பு மற்றும் வேகவைத்த வெங்காயத்தை போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
★பின் அரைத்த விழுதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றினால், சுவையான சின்ன வெங்காயம் புதினா துவையல் நொடிப்பொழுதில் தயாராகிவிடும்.