தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சைவ பிரியர்களின் காதல் உணவு.. சுவையான சோயா 65 செய்வது எப்படி?..!
சூடான, சுவையான சோயா 65 எவ்வாறு சமைப்பது என்பது குறித்து தற்போது காணலாம்.
சோயாவில் அதிகமான புரோட்டீன் சத்து இருக்கிறது. இதனால் சைவம் மட்டும் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உடலுக்கு தேவையான சத்து கிடைக்கிறது.
தேவையான பொருட்கள் :
சோள மாவு - 2 தேக்கரண்டி
மீல்மேக்கர் - 200 கிராம்
மைதா மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மீல்மேக்கர் போட்டு வேக வைக்கவேண்டும்.
★மீல்மேக்கர் நன்றாக வெந்த பின் அதனை மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
★பின் அதனுடன் சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
★அடுத்து அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
★இறுதியாக ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்த மீல்மேக்கரை போட்டு எடுத்தால் சுவையான சோயா 65 தயாராகிவிடும்