தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கோடைக்காலத்தில்.. குட்டீஸ்களை எப்படி பார்த்துக்கொள்வது.?! இதோ தெரிந்துகொள்ளுங்கள்.!
கோடைக்காலம் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது குழந்தைகளின் பள்ளி விடுமுறை தான். வெயிலில் கோடை விடுமுறையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் சில பெற்றோர்கள் கவலைப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் வெயிலின் தாக்கம் பற்றி வானிலை ஆய்வு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அளவிற்கு அவதிப்படுவார்கள் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் வெப்பமானது சென்ற ஆண்டின் வெப்பத்தைவிட இருமடங்கு அதிமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த கோடை விடுமுறையை மிகவும் கவனமாக நாம் கையாள வேண்டும். இதில் பெரும் சிரமம் என்னவென்றால் குழந்தைகளை பத்திரமாக வெப்பம் தாக்காமல் பார்த்துக் கொள்ளவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை ஆகும். ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் வைட்டமின் குறைபாடுகள் வருவதற்க்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
கோடைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீர் தாகம் அதிகம் எடுக்கும். எனவே அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. இந்த வெப்பம் நமது உடலில் நீரிழப்பு, வயிற்றுப் போக்கு மற்றும் டைபாய்ட் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெய்யிலில் நீண்ட நேரம் இருந்தால் சூரிய ஒளியில் இருந்து வரும் வெப்பக் கதிர்கள் உடலில் வறட்சியை அதிகமாக்கி சோர்வை உண்டாக்கும். அதனால் கோடைக்காலத்தில் காட்டன் துணி அணிந்து வருவது மிகவும் சிறப்பான ஒன்று.
பொதுவாக கோடைக்காலத்தில் இயற்கையான பழவகைகள் சாப்பிடுவது நல்லது. முக்கியமாக குழந்தைகளுக்கு பழைய உணவு மற்றும் குளிர்பானங்கள் குடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்காமல் வீட்டிற்கு உள்ளேயே பாதுகாத்து வைப்பது நல்லது. அவர்கள் வெயிலில் விளையாடும்போது வியர்வை ஏற்பட்டு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கோடைக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.