"இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு மனச்சோர்வு இருக்கிறது என்று அர்த்தம்!"



Symptoms for depression

சோர்வு என்பது உடல், மனம், உணர்ச்சி, மன அழுத்தம், அதிக வேலை காரணமாக ஏற்படக்கூடியது. அடிப்படை வேலைகளைக் கூட செய்யக்கூடிய ஆற்றல் இல்லாமல் எதிலும் ஒரு ஆர்வமற்ற
நிலையையே சோர்வு என்கிறோம்.

stress

இந்த சோர்வானது உடல் மற்றும் மனச்சோர்வுக்கு அப்பாற்பட்டு, எந்த ஒரு முயற்சிகளிலோ அல்லது வேலைகளிலோ ஈடுபட முடியாத நிலை. சோர்வில் இருக்கும்போது, ​​இதற்கு முன் ஆர்வத்தை தூண்டிய பல விஷயங்களில் ஆர்வமற்ற நிலையை உருவாக்கும்.

சோம்பேறித்தனம் என்பது வேறு. மனச்சோர்வு என்பது வேறு. சோம்பேறித்தனம் என்பது நீங்கள் செய்யும் வேலைகளைத் தொடங்குவதற்கு ஆர்வம் இல்லாத ஒரு நிலை. ஆனால் மனச்சோர்வு என்பது நீங்கள் ஆழ்ந்த அக்கறை மற்றும் விருப்பம் கொண்ட விஷயங்களிலேயே உங்கள் ஆர்வத்தை குறைக்கிறது.

stress

வீட்டில் உறவுகளுடன் அல்லது வேலையில் சிடுமூஞ்சித்தனமாக இருப்பது, பொறுப்புகள் மீது வெறுப்பு கொண்ட நிலை, ஓய்வு நேரத்தில் கூட பொறுப்புகளைப் பற்றியே சிந்திப்பது போன்றவை எல்லாம் நீங்கள் மனச்சோர்வில் இருப்பதற்கான அறிகுறிகளே.