மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் எடையை குறைத்து., இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புளி..! புளியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?.! தெரிஞ்சிக்கோங்க..!!
தினமும் புளி உண்பதால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும். புளியில் உள்ள நன்மைகள் குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
அன்றாட வாழ்க்கையின் பாரம்பரிய சமையலில் புளி மிக முக்கிய பங்காற்றுகிறது. அறுசுவைகளில் முக்கியமான சுவையும் புளியின் சுவைதான். தினமும் உண்ணும் உணவில் புளி சேர்த்துக் கொள்வதன் மூலம் ஜீரணசக்தியை அதிகரிக்க இயலும். மேலும் புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவுகிறது.
புளியில் கொழுப்பு சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றது. தினமும் புளியை உணவில் சேர்த்துக்கொள்வதால் வயிற்று உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.
அத்துடன் இதில் உள்ள பிளேவனாய்டு மற்றும் பாலிபினால் உடல் செயல்பாடுகளை தூண்டி அதிக எடையை குறைக்க உதவுவதோடு, நார்ச்சத்து பசியை குறைத்து மற்ற உணவுகள் மீதான ஈர்ப்பையும் முழுவதுமாக குறைக்கிறது. இதனால் தேவையற்ற கழிவுகள், உடலில் இருந்து வெளியேற்றி ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும். பிளேவனாய்டு நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
எனவே, புளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பது மட்டுமல்லாமல், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இயலும். செரிமானத்தை அதிகரிக்கவும், வயிற்றுப் புண்களை ஆற்றவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும், புளியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் வைட்டமின் சி உள்ளது. இதன் ஆண்ட்டி செப்டிக் பண்புகள் உடலில் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.