"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
இட்லி மீந்துருச்சா?.. கவலையே படாதீங்க.. சுவையான போண்டா செய்யலாம் வாங்க..! அருமையான ரெசிபி..!!
காலையில் மீந்துபோன இட்லியை வைத்து எப்படி போண்டா செய்வது என்று தற்போது காணலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
இட்லி - 3
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - தேவைக்கேற்ப
தண்ணீர் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் இட்லிகளை உதிர்த்து வைக்க வேண்டும்.
★பின் பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★ஒரு பாத்திரத்தில் உதிர்த்து வைத்த இட்லி, நறுக்கி வைத்த பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை மற்றும் கடலை மாவு, உப்பு அனைத்தையும் சேர்த்,து அதனுடன் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறிது உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
★அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு ஒருபக்கம் வெந்ததும் மற்றொரு பக்கம் பொரித்து எடுத்தால் இட்லி போண்டா தயாராகிவிடும்.