பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
சாதம் மீந்து விட்டதா?..! வீணாக்காமல் மாலையில் சுடசுட இதை செய்து அசத்துங்கள்.! அசத்தல் டிப்ஸ்..!!
காலையில் செய்துவைத்த சாதம் மீந்து விட்டதா? அதை வைத்து எளிமையாக போண்டா செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
கடலை மாவு - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
சாதம் - 2 கப்
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை :
★முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★பின்னர் மீந்த சாதத்தை போட்டு நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.
★அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கடலை மாவு, கருவேப்பிலை, உப்பு, காயவைத்த எண்ணெய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
★இறுதியாக கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், பிசைந்து வைத்த மாவை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ரைஸ் போண்டா தயாராகிவிடும்.