உணவுக்கு பயன்படுத்தும் உப்பில் எத்தனை வகைகள் இருக்கிறதா.! என்னென்ன தெரியுமா.?



Varieties of salt

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் உப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. அறுசுவைகளில் உவர்ப்பு சுவையுடைய உப்பு, உணவுகளில் சுவையை அதிகமாகி தருகிறது. "அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு" என்ற பழமொழிக்கேற்ப உப்பு உணவில் கூடினால் அந்த உணவை குப்பையில் தான் போட வேண்டும்.

Salt

நம் உணவில் பயன்படுத்தும் உப்புகளில் பல வகைகள் மற்றும் நிறங்கள் உள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வெள்ளை நிறமுடைய உப்பை தான் நாம் தினமும் அன்றாட உணவில் சமைத்து வருகிறோம். உப்பில் இருக்கும் பல்வேறு வகைகளை பார்க்கலாம் வாங்க.

1. டேபிள் உப்பு - இது நாம் தினசரி வீடுகளில் பயன்படுத்தும் உப்பு தான்.
2. கோசர் உப்பு - இந்த உப்பு இறைச்சி மற்றும் மீனை பதப்படுத்த பயன்படுத்தும் உப்பு ஆகும்.
3. கடல் உப்பு - இந்த உப்பில் மற்ற உப்புகளை விட இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது.
4. இமயமலை உப்பு - இந்த உப்பை கல் உப்பு மற்றும் பிங்க் சால்ட் என்றும் குறிப்பிடலாம். தற்போது இந்த உப்பையும் உணவுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

Salt

5. செல்டிக் கடல் உப்பு - பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கடற்கரையின் அருகில் உள்ள ஆறு, ஏரி போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உப்பு தான் இது. இந்த உப்பை இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை சமைப்பதற்கு ஏற்றதாக கருதி வருகின்றனர்.

இவற்றைத் தவிர கருப்பு உப்பு, ஸ்மோக்ட் உப்பு, செதில் உப்பு என்று பல வகைகள் இருந்து வருகின்றன.