திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உங்கள் பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள அழுக்கு மற்றும் மஞ்சள்கரை நீங்க வேண்டுமா..? சூப்பர் டிப்ஸ் இதோ..!
பொதுவாக நம் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் கழிவறைகளில் அழுக்கு மற்றும் மஞ்சள் கரை போன்றவை படிந்து விடுவதால் பயன்படுத்தும் நபர்களுக்கு ஒருவிதமான அசௌகரியத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் கூட முகம் சுளிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் கழிவறைகளில் இருந்து தான் அனேக கிருமிகள் உருவாகின்றன. ஆனால் சிலரது வீட்டில் இருக்கும் கழிவறைகளில் உள்ள அழுக்குகளை எவ்வளவு தேய்த்தாலும் கரைகள் போனப்பாடு இருக்காது. இந்த கரைகளை அகற்ற சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்.
அவையாவன 1) போராக்ஸ் ஒரு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. ஒரு ஈரமான ஸ்பான்சை போரக்ஸ் தூளில் தேய்த்து கழிவறைகளில் உள்ள டைல்ஸில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் மஞ்சள் கரைகளின் மீது நன்றாக தேய்த்து ஸ்க்ரப் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தங கழிவறையில் உள்ள அழுக்கு மற்றும் மஞ்சள் கரைகள் எளிதில் நீங்கிவிடும்.
2) மேலும் கழிவறைகளில் படிந்துள்ள மஞ்சள் கரைகள் மீது சமையல் சோடாவை தூவி விட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்னர் ஒரு பாத்ரூம் பிரஸ் கொண்டு அதனை நன்கு தேய்த்து கழுவினால் கழிவறையில் உள்ள அழுக்கு மற்றும் உப்புக்கரைகள் எளிதில் நீங்கிவிடும்.
3) ஒரு பாத்திரத்தில் சிறிது எலுமிச்சம்பழம் சாறு, தூள் உப்பு மற்றும் வாஷிங் பவுடர் இவைகளை சேர்த்து நன்கு கலக்கி ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். பின்னர் அந்த பேஸ்ட்டை ஒரு ஸ்க்ரப்பரில் போட்டு கழிவறைகளில் படிந்துள்ள கரைகள் மீது தேய்க்கவும். பிறகு 30 நிமிடம் வரை ஊறவைத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தால் கழிவறைகள் பளிச்சென்று மாறிவிடும்.