பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் தர்பூசணி பாயசம்.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் தர்பூசணி பாயசம் எப்படி செய்வது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
தேவையான பொருட்கள் :
பால் - 1/2 லிட்டர்
தர்பூசணி சாறு - 1/2 கப்
ஓட்ஸ் - 1/4 கப்
சர்க்கரை - தேவைக்கேற்ப
முந்திரி பருப்பு, பாதாம் - சிறிதளவு
செய்முறை :
★முதலில் ஓட்ஸை தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் மாவு போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
★பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, பாலை நன்கு கொதிக்க வைத்து ஆறவிடவும்.
★அடுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
★தொடர்ந்து ஓட்ஸ் மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கிளறி விட வேண்டும்.
★பின் ஓட்ஸ் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறி, சிறிதளவு பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் தர்பூசணி சாறு ஊற்றி இறக்கவும்.
★இறுதியாக பாதாம், முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து பாயாசத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அற்புதமாக இருக்கும்.