சர்க்கரை நோயாளியா நீங்கள் ? அப்போ இதை செய்யுங்கள்... சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் எளிய முறைகள்..!



ways-to-control-sugar-levels-in-the-body

நம் உடலில் அதிக சர்க்கரை அளவு நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. கணையம் என்னும் நாளமில்லா சுரப்பிலிருந்து சுரக்கும் இன்சுலினை சரிவர பயன்படுத்த முடியாமல் போவதாலும், குறைவாக இன்சுலின் சுரப்பதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

இந்த நீரிழிவு நோய் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இதயம், சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்ற உறுப்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சரியான உடல் எடையும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.

sugar patient

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களில் 7% பேருக்கு பாதிப்பின் தீவிரம் காரணமாக கை, கால் விரல்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக சில வழிமுறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் இதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

முதலாவதாக சர்க்கரை நிறைந்த உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். இரண்டாவதாக உடல் ஆரோக்கியமாக இருக்க சிறிது நேரம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யவும். மூன்றாவதாக கசப்பான காய்கறிகள் மற்றும் மூலிகை நிறைந்த உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவுப் பொருட்களை உட்கொள்ளவும். நான்காவதாக மது மற்றும் புகை பிடிப்பதை விட்டு விடவும் ஏனென்றால் இது இன்சுலின் செயல்பாட்டினை முற்றிலுமாக தடுக்கிறது. ஐந்தாவதாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள் இது உடலில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கொழுப்பு சேருவதை தடுக்கிறது.

மேற்கண்ட அனைத்தையும் நாம் தவறாமல் பின்பற்றுதல் மூலமாக நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்