பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
"காய்ச்சலின் போது இந்த பழங்களை சாப்பிட்டால் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்கும்!"
ஆரோக்கியமான வாழ்வுக்கு நம் அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை நம் உடலில் நோய் வருவதை முன்கூட்டியே தடுப்பதோடு மட்டுமல்லாமல்,விரைவில் நம் உடலை குணப்படுத்தவும் செய்கின்றன.
பலவிதமான பழங்கள் இருக்கின்றன. மேலும் ஒரே பழத்தில் கூட பல விதங்கள் இருக்கின்றன. பொதுவாகவே பழங்ளை 5 வகைப்படுத்தலாம். அவை, பெர்ரி, கிச்சிலிப் பழங்கள், ட்ரூப்ஸ், போம்ஸ் ஆகியவையே. இந்த வகைப் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய்கள் அண்டாது.
ஆரஞ்சு உடலை ஈரப்பதமாக்கி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. கிவி பழம் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட வேண்டும்.
இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் வைரஸை குறைக்கும். நார்ச்சத்து நிறைந்த மாம்பழம் வயிற்றுக்கு மிகவும் நல்லது. பெர்ரி பழங்களிலும் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவற்றையும் தினமும் உட்கொள்ளலாம்.