மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவபெருமான் ஏன் தனது உடல் முழுவதும் சாம்பல் பூசியுள்ளார் தெரியுமா? அதன் பின்னால் உள்ள ரகசியம் இதோ!
இந்து கடவுள்களில் முதன்மையான கடவுள்களில் ஒருவராக இருப்பவர் சிவபெருமான். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் மிகப்பெரிய சூலாயுதம், உடுக்கை, கழுத்தில் பாம்பு மற்றும் உடல் முழுவதும் சாம்பல் பூசிய படியே தோற்றம் அளிக்கின்றார். இவை அனைத்துக்கும் ஒரு காரணம் உண்டு.
இதில் சிவன் ஏன் உடலில் சாம்பலை பூசியுள்ளார் என்பதுபற்றி ஒரு புராண
கதையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சிவபெருமானின் மனைவி ஆதிசக்தியின் அவதாரமான சதி தனது உடலை தீ க்கு இரையாக்கிக்கொள்வார். தனது மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ளமுடியாத சிவபெருமான் தன் ஆத்திரம், வலி மற்றும் வேதனையைக் கட்டுப்படுத்த சதியின் உடலை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்.
அப்போது விஷ்ணு பகவான் சதியின் இறந்த உடலை தொடும்போது அவர் சாம்பலாக மாறுகிறார். இதனால் தன் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத சிவபெருமான், அவர் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உடல் முழுவதும் தன் மனைவியின் சாம்பலை பூசிக்கொண்டதாக அந்த புராணம் சொல்கிறது.