மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"குளிர் காலத்தில் ஏற்படும் டான்சில் பிரச்சனைக்கு தீர்வு இதோ!"
பொதுவாக டான்சில் என்பது ஒரு வருடத்தின் எல்லா காலங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய தொற்று தான். ஆனால் குளிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். டான்சில் தொற்று ஏற்பட்டால் தொண்டையில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.
இதனால் உணவைக் கூட உண்ண முடியாமல் அவதிப்பட நேரிடும். இதற்கு மருத்துவரை அணுகினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். ஆனால் வீட்டிலேயே டான்சிலை குணமாக்கும் எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை இங்கு பாப்போம். தொண்டையில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் புதினாவிற்கு உண்டு.
வெறுமனே புதினா இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அல்லது இரண்டு டம்ளர் நீரில் புதினா இலைகளைப் போட்டு கொதிக்க விட்டு ஒரு டம்ளராக வற்றிய பின், அதை வடிகட்டி உப்பு சேர்த்துக் குடிக்கலாம். அதனுடன் சுவைக்காக சிறிது தேனும் சேர்த்து குடிக்கலாம்.
மேலும் வெதுவெதுப்பான பாலில் மிளகுத்தூள், மஞ்சள், இஞ்சி சேர்த்துக் கலந்து குடிக்கலாம். இது தொண்டைக்கு நல்ல இதம் தரும். மேலும் டான்சில் பிரச்னையும் சரியாகும். மேலும் துளசி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலமும் டான்சில் பிரச்சனையால் ஏற்படும் வலி, வீக்கம் குறையும்.