காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுறீங்களா.? இது உங்களுக்கு தான்.!
ஆரோக்கியத்திற்கான குறிப்புகளில் முக்கியமாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று 'வீட்டு உணவை உண்பது'. ஹோட்டல்களில் உண்பதற்கு மாறாக, வீட்டில் சமைத்த உணவை உண்பதால் நமது ஆரோக்கியத்திற்கான சரியான பாதையில் நாம் செல்வதாக கொள்ளலாம்.
வீட்டில் சமைக்கும் பொழுது, அந்த உணவில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களையும், அதன் அளவுகளையும் நாமே நிர்ணயம் செய்ய முடியும். அஜினோமோட்டோ மற்றும் உணவிற்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை தவிர்க்கலாம். ஃபுட் பாய்சனிங் நிகழாமல் தவிர்க்க முடியும். உணவின் சுகாதாரத்தையும் நாம் அளவிட முடியும்.
நம் குடும்பத்தினர் நமக்காக செய்யும் உணவில் நமக்கான அக்கறையும் கலந்திருக்கும். நமக்காக நாமே சமைக்கும் பொழுது கூட நம் விருப்பப்படி செய்து உண்ணலாம். உணவின் சுவை கூட்ட சின்ன சின்ன பரிசோதனைகள் செய்வது கூட ஒரு புது அனுபவத்தையும், மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும்.
துரித உணவுகள் விளைவிக்கும் கேடுகள் நாம் அனைவரும் அறிந்ததே! கடையில் வாங்கும் ஒரு வேளை உணவிற்காக ஆகும் செலவில் நாம் இரண்டு அல்லது மூன்று வேளைகள் சமைத்து உண்ண முடியும். வீட்டில் சமைக்கும் பொழுது எண்ணெயின் அளவை குறைக்க முடியும். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்தே உணவின் தரத்தையும், சுவையையும் கூட்ட முடியும்.
என்றோ ஒரு நாள் கடைகளில் உணவு உண்பதில் தவறில்லை. அதை வாடிக்கையாக கொள்ளாமல், ஆரோக்கியமாக சமைத்து உண்பது நமக்கு நன்மை பயக்கும். நம் உடலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவின் மூலமே கிடைக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.