"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே தொகுதியில் ஒரே பெயரில் 6 வேட்பாளர்கள் போட்டி.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 112 பேர் போட்டியிடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை (தனி), அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 112 பேர் போட்டியிடுகின்றனர்.
அதில், புதுக்கோட்டை தொகுதியில் 21 பேரும், கந்தர்வகோட்டை தொகுதியில் 14 பேரும், ஆலங்குடி தொகுதியில் 11 பேரும், விராலிமலை தொகுதியில் 22 பேரும், திருமயம் தொகுதியில் 22 பேரும், அறந்தாங்கி தொகுதியில் 22 பேரும் என மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் ஒரே பெயரில் 6 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
திருமயம் தொகுதி வேட்பாளர்கள்:-
வைரமுத்து (அ.தி.மு.க.), முனிராஜ் (அ.ம.மு.க.), ரகுபதி (தி.மு.க.), சிவராமன் (நாம் தமிழர் கட்சி), செல்வகுமார் (வீர முத்தரையர் முன்னேற்ற கழகம்), திருமேனி (மக்கள் நீதி மையம்), புரட்சி பாலன் (அண்ணா திராவிடர் கழகம்), காந்திபன் (மை இந்தியா பார்ட்டி), சிவகுமார் (புதிய தமிழகம்), பழனியப்பன் (சுயே), அழகு சுப்பையா (சுயே), துரைராஜன் (சுயே), சுந்தரம் (சுயே), மணிகண்டன் (சுயே), முத்து அடைக்கலம் (சுயே), மதியழகன் (சுயே), கார்த்திக் (சுயே), மேலும் செல்வகுமார் என்ற பெயரில் 5 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.