தோழிக்கு குழந்தை கொடுத்து டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்.எல்.ஏ... பெண் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!



a Woman Complaint Against Karnataka BJP MLA Rajkumar Patil Telkur Cheating Case

பாஜக எம்.எல்.ஏ ராஜ்குமார் என்னுடன் நெருங்கி பழகி குழந்தையை கொடுத்துவிட்டு, இன்று குழந்தை என்னுடையது இல்லை என்று மறுக்கிறார் என பெண் வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மையின் ட்விட்டர் கணக்கை இணைத்து, கடந்த 5 ஆம் தேதி பெண்ணொருவர் தகவல் ஒன்றை பதிவு செய்தார். அந்த பதிவில், "கலபுராகி மாவட்டம் சேடம் தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜ்குமார் பாட்டீல் தெல்குர் என்னுடன் நெருங்கி பழகியதால், எனக்கு குழந்தை பிறந்தது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறிய நிலையில், பின்னாளில் திருமணம் செய்ய மறுத்து, குழந்தை என்னுடையது இல்லை என்று கூறுகிறார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த ட்விட் தொடர்பான தகவல் எம்.எல்.ஏ ராஜ்குமார் பாட்டீலின் கவனத்திற்கு செல்லவே, அவர் பெண்மணி என்னிடம் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டுகிறார் என பெங்களூர் விதான் சவுதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி தமிழ்நாட்டினை சேர்ந்த 4 பேரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நேற்று முன்தினத்தில் பெங்களூரில் இருக்கும் பெண்ணின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

karnataka

காலை முதலாக நடந்த விசாரணைக்கு பின்னர், இரவில் பெண்மணி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், பெண் வழக்கறிஞர் ஜெகதீஸ் என்பவரின் உதவியுடன் கர்நாடகா கிழக்கு மண்டல காவல் ஆணையரை நேரில் சந்தித்து, விஷயம் தொடர்பாக புகார் அளித்து இருக்கிறார். மேலும், எம்.எல்.ஏ-வின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து, வழக்கறிஞர் ஜெகதீஷ் இல்லத்தில் வைத்து பெண் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜக எம்.எல்.ஏ ராஜ்குமார் பாட்டீல் தெல்குர் எனது நீண்ட கால நண்பர் ஆவார். அவர் என்னுடன் நெருங்கி பழகிய காரணத்தால், எனக்கு குழந்தை பிறந்தது. முதலில் குழந்தையை நமது குழந்தை என்று கூறி வந்த எம்.எல்.ஏ ராஜ்குமார், இன்று என்னையும், எனது குழந்தையையும் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். நான் ரூ.2 கோடி கேட்டு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். எனக்கு பணம் தேவையில்லை. எனது குழந்தைக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும். அதுதான் எனக்கு வேண்டும்" என்று தெரிவித்தார்.