திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#LokSabha2024: "விருதுநகர் எனக்கு, ச.ம.க உனக்கு, டீலிங் ஓவர்" சரத்குமாரை பங்கமாக கலாய்த்த நடிகை விந்தியா.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த தேர்தல்களில் ஒரே கூட்டணியில் பயணித்த அதிமுக மற்றும் பாஜக இந்த முறை எதிரெதிர் துருவங்களில் போட்டியிடுகின்றன. அதிமுக மற்றும் பாஜக இரண்டு கட்சியைச் சார்ந்த பேச்சாளர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைந்ததை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அவர் வடிவேலுவின் பேக்கரி காமெடி ரேஞ்சுக்கு சரத்குமாரை கலாய்த்தது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சேவியர் தாஸை ஆதரித்து பிரச்சாரம் செய்த விந்தியா, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்ததை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் "சமத்துவ மக்கள் கட்சியைச் சார்ந்த சரத்குமார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் விருதுநகர் தொகுதியை நான் எடுத்துக் கொள்கிறேன் என் கட்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று டீலிங் பேசியதாக கலாய்த்து இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.