மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அதிமுக எல்.எல்.ஏ அதிரடி கைது.. அதிமுகவினர் காவலர்களிடையே சலசலப்பு..!
என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலியில் என்.என்.சி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல்மின்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மேற்படி நிலத்தை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக, அதிமுக உட்பட பல எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றன. அரசியல் கட்சியினர் மக்களை சந்தித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அதிமுக சார்பில் என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, அப்போராட்டத்தை நடத்திய அதிமுக புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா செய்ததைத்தொடர்ந்து, அங்கு சலசலப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம், தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.