விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய திமுக நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.!



  AIADMK Vijayabaskar Save DMK Party Man Life 

 

புதுக்கோட்டை - தஞ்சாவூர் நெடுஞ்சாலை பகுதியில், சின்னையா சமுத்திரம் கிராமத்தில் கார் - சரக்கு பாரம் ஏற்றி வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விதிப்பது ஏற்பட்டது. 

இந்த விபத்தில் வாகனங்களில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவ்வழியே அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் சென்றார். 

முன்னாள் அமைச்சர் செல்வதற்கு முன் விபத்து நடந்த நிலையில், விபத்தை கண்டதும் காரில் இருந்து இறங்கி விபத்திற்குள்ளான இடத்திற்கு சென்ற விஜயபாஸ்கர், அவர்களுக்கு தேவையான உதவியை செய்தார். 

Admk

மேலும், தனது காரிலேயே சரக்கு வாகன ஓட்டுநர் உட்பட அனைவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

விபத்திற்குள்ளான காரில் பயணம் செய்த புதுக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர் இராமகிருஷ்ணரின் தந்தையும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.