அதிமுக + பாஜக+ நாம் தமிழர்... திமுகவை வீழ்த்த அமித் ஷா மாஸ் திட்டம்.!! இபிஎஸ் அதிரடி உத்தரவு.!!

2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வந்தார். இதனால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என்ற செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வர இருக்கிறார்.
மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி
2023 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இனி எப்போதும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதிமுக மற்றும் பாஜக 2 கட்சிகளுக்கும் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்திற்கு அமித் ஷா வருகை
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழகம் வர இருக்கிறார். மேலும் நாளை காலை முதல் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரையும் சென்னையில் தங்கியிருக்குமாறு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்தி அடிபடுகிறது. இதனால் பாஜக மற்றும் அதிமுக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: "நீட் எதிர்ப்பு திமுகவின் சுயநல நாடகம்..." அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை.!!
நாம் தமிழருடன் பாஜக கூட்டணி
மேலும் தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியையும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சேர்ப்பதற்கு அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அனைத்து கட்சிகளுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு இருப்பதால் அவர்கள் அனைவரையும் இணைத்து திமுகவை வீழ்த்த அமித்ஷா வியூகம் அமைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு காரணங்களால் சமீப காலமாக பிரச்சனைகளில் சிக்கியிருக்கும் சீமானை தங்கள் பக்கம் இழுப்பதற்கு அமித்ஷா திட்டம் தீட்டி இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படிங்க: "சொல்லி அடிக்கும் கில்லி.." முதல்வரின் அடுத்த கட்ட நகர்வுகள்.!! கலக்கத்தில் ஆளுநர் மாளிகை.!!