மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BudgetSession2023-24: உயிர்தியாகம் செய்யும் படைவீரர்களுக்கான இழப்பீடு தொகை ரூ.40 இலட்சமாக உயர்வு..!
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் 2023-24 இன்று சட்டப்பேரவையில் தொடங்கியது. மக்களுக்கான அறிவிப்புகள் பின்வருமாறு,
மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ₹1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித்தொகை ₹2000 ஆக அதிகரிக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இருமடங்காக உயர்த்தப்படும். ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.
சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ₹25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கல் தேர்வுக்கு தயாராக ரூ.7500, முதன்மை தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை வழங்க ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.