கிரிக்கெட்டில் பிரபலம்.... தமிழகத்தில் 22 வயதில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்.! வாழ்த்திய அண்ணாமலை.!



bjp leader appreciate 22 years old boy candidate

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்தநிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாநகராட்சியில் 12-வது வார்டில் போட்டியிட நவநீதகிருஷ்ணன் என்ற இளைஞர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “22 வயதான அன்பு சகோதரர் நவநீதகிருஷ்ணன் திருச்சி கார்ப்பரேஷன் 12-வது வார்டுக்கு பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக களமிறங்குகிறார். மோடிஜிகிரிக்கெட்கிளப் மூலமாக அந்தப் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். சமுதாய பணியில் நாட்டம் கொண்டவர். நம் மக்களுக்கு பணி செய்ய வாழ்த்துக்கள்!" என குறிப்பிட்டுள்ளார்.