Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
தேசிய கீதம் பாடுவதில் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? - பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி.!
2025 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளுநர் அரசுடன் கொண்ட தேசிய கீதம் இசைக்கப்படும் விவகார முரண் காரணமாக, அவையில் இருந்து வெளியேறினார்.
தேசிய கீதம் பாடுவதில் எரிச்சல்?
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்துப்பேசியபோது, "தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என ஆளுநர் கேட்கிறார். திமுக கூட்டணியியல், பிற மாநிலத்தில் பாஜக அல்லாத மாநில அரசுகள் இருக்கிறது. தேசிய கீதம் ஆளுநர் வருகை, புறப்பாடு போது இசைக்கப்பட்ட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு அதனை மாறுகிறது. தேசிய கீதம் பாடுவதில் இவர்களுக்கு ஏன் எரிச்சல்? தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்படும் என ஆளுநர் கூறுகிறார்.
இதையும் படிங்க: "நான் உயிருடன் இருக்கும் வரை விடமாட்டேன்" - அண்ணாமலைக்கு எதிராக பொங்கிய வைகோ.!
மக்களை திசை திருப்பும் முயற்சி
ஆளுநரை அவமதிக்க வேண்டும். அவர் சொன்னால் நாம் என் கேட்க வேண்டும்? என திமுக நினைக்கிறது. அண்ணா பல்கலை., மாணவி, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் அரசாக திமுக இருக்கிறது. இதனை பேச எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறது. இதனால் திமுக மக்களை திசைதிருப்ப ஆளுனருடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது. நாங்கள் சட்டப்பேரவையில் பேசுவது கூட சரிவர வெளியிடப்படுவதில்லை. காட்சிகள் அனைத்தும் வெட்டி, ஒட்டி பதிவு செய்யப்படுகிறது.
எதிர்வரும் தேர்தல் காரணமாக, திமுக தனது சரிவை உணர்ந்துள்ளது. இதனால் மக்களுக்கு ஆதரவான போராட்டத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை. மாணவி கருப்பு துப்பட்டா போடுவதை கண்டு திமுக பயம் கொள்கிறது. இதனால் மக்களை திசைதிருப்ப முயற்சி நடக்கிறது" என பேசினார்.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து புறக்கணிக்கப்படும் நடிகை குஷ்பூ - லீக்கான ஆடியோ.. தமிழக அரசியலில் பரபரப்பு.!