மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாம் தமிழர் சீமான் மீது திடீர் வழக்குபதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2018 ஆம் ஆண்டு கிண்டியில் நடைபெற்ற காமராஜர் நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் துணை முதல்வர், முதல்வர் குறித்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்தும், எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வருவது குறித்தும் பல விமர்சன கருத்துக்களை கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் கூறியது தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் இருப்பதாக கூறி தற்போது கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புவது, பிரிவினையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டு இரு வருடங்கள் கழித்து தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.