#Breaking: பகுஜன் சமாஜ்வாதி தமிழ்நாடு தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம்; அடுத்த அதிரடி கைது.!



Chennai Perambur BSP K Armstrong Murder Case 18th Accuse Arrested 

சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ம் தேதி 6 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

திட்டமிட்டு நடந்த படுகொலை

விசாரணையில், மறைந்த ரௌடி ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலை சம்பவத்துக்கு பழிக்கு பழியாக காத்திருந்த ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு படுகொலை செய்தது அம்பலமானது. ஆம்ஸ்ட்ராங் தன்னை நம்பி வந்த பலருக்கும் உதவி செய்து இருந்த காரணத்தால், அவரின் மறைவு மற்றும் 16 வது நினைவுநாளின் போது பலத்த காவல்துறை பாதுகாப்பு சென்னை மாநகரில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அதிமுக கவுன்சிலர் கைது.. தமிழ்நாடு அரசியலில் அடுத்த அதிர்ச்சி.!

குற்றவாளியில் ஒருவர் என்கவுண்டர்: 

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலா, அவரின் கூட்டாளிகள் திருவேங்கடம், வழக்கறிஞர்கள் மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன், அஞ்சலை என 17 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் திருவேங்கடம் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டபோது, தப்பிச்செல்ல முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டார். 

18 பேர் அதிரடி கைது

இந்நிலையில், ஆற்காடு சுரேஷின் உறவினர் பிரதீப் என்ற நபரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான பிரதீப்பும், தற்போது கைதான குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகார சதித்திட்டத்தில் பிரதீப்புக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் ப்ரதீபிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது வரை இவ்விவகாரத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.