மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அதிமுக கவுன்சிலர் கைது.. தமிழ்நாடு அரசியலில் அடுத்த அதிர்ச்சி.!
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே. ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5 ம் தேதி பொண்ணை பாலா மற்றும் அவரின் கூட்டாளிகளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்த விவகாரத்தில் தற்போது வரை 14 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குற்றவாளி திருவேங்கடம் காவல் துறையினரால் சமீபத்தில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார். பொண்ணை பாலா மற்றும் அவரின் கூட்டாளிகள், முன்னாள் அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, வழக்கறிஞர்கள் ஹரிஹரன், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதிமுக கவுன்சிலர் கைது
இன்று கைதான அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்ய ரௌடி கும்பலுடன் சதித்திட்டம் தீட்டியது மற்றும் மறைந்த ரௌடி ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த சம்பவம் அம்பலமானது.
இந்நிலையில், இன்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அருள் என்பவரின் செல்போனை வைத்திருந்த ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டார். கைதான ஹரிஹரன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர், ஒன்றிய அதிமுக கவுன்சிலராக இருக்கிறார். கொலைக்கு பயன்படுத்திய 5 செல்போன்கள் கூவம் ஆற்றில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.