மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 100 மதிப்பெண் கொடுத்த சேகர்பாபு.. கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்.!
எதிர்காலத்தில் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் முதல்வரின் எண்ணத்தை தொடர்ந்து நிறைவேற்றுவார் என அமைச்சர் சேகர் பாபு பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். அவர் அமைச்சராக 100 மதிப்பெண்கள் பெற்றுவிட்டார். எதிர்காலத்தில் முதல்வரின் எண்ணத்தை அவர் நிறைவேற்றுவார்.
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் வசதிக்கு கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நிறைவுபெறும்" என கூறினார்.