பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
செந்தில் பாலாஜியால், திமுகவுக்கு திணறல்.. உதயநிதிக்கு பறந்த உத்தரவு.!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமிழகத்தின் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தவிர புதுச்சேரியிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. இந்த முறையும் அதே வெற்றியை திமுக பதிவு செய்ய நினைத்து அதற்காக தீவிரமாக களமாடி வருகிறது. இந்த முறை எப்படியும் 40க்கு 40 வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது திமுக. இந்த நிலையில் தான் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அங்கு நடக்கின்ற தேர்தல் பணிகளை அவர் பார்வையிட இருக்கிறார். செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் கரூர் பகுதியில் திமுக பெருமளவில் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி இல்லாத காரணத்தால் கரூர் திமுக நிர்வாகிகளும் பணி செய்வதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். எனவே அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உதயநிதி அந்த பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது மற்றும் அவர்களுடன் தங்கி சில நாட்கள் பணி புரிவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட இருக்கிறாராம்.
செந்தில் பாலாஜி இல்லாமல் கரூரில் எப்படி ஜெயிக்கலாம் என்று பிரத்தியேகமாக ஒரு ஆய்வை திமுக மேற்கொண்டு வருகின்றதாம். செந்தில் பாலாஜி இல்லாத குறையை போக்கி கரூரில் மீண்டும் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதயநிதியை திமுக களம் இறக்கிவுள்ளது கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.