ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
செந்தில்பாலாஜி தி.மு.க-விற்கு சென்றதால் முதலமைச்சர் பழனிச்சாமி வேதனை!.

சேலம் மாவட்டம் வீரகனூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் விவசாயிகளின் முக்கிய தேவையான நீர் ஆதாரத்தை உருவாக்கும் வகையில், நடப்பாண்டில் குடிமராமத்து திட்டம் 1,511 ஏரிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான கால்நடை ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும். இதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட உயர் தர கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு செய்து தரப்படும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் கட்சியின் உண்மை விசுவாசிகள், தொண்டர்கள் அதிமுகவில் இருக்கின்றனர்.
அதிமுகவில் அமைச்சர் என்ற அந்தஸ்துடன் மக்களுக்கு அடையாளம் காணப்பட்ட செந்தில்பாலாஜி, நன்றி மறந்துவிட்டதாக முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.