ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பூங்கொத்துடன் கடிதம் அனுப்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் அவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.
I have great pleasure in conveying my best wishes to you on your birthday shri @AmitShah ji.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 22, 2020
I pray the Almighty to grant you many more years of good health and peace to serve the Nation. pic.twitter.com/Vs1O9dbBb3
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் அவருக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில், “உங்கள் பிறந்தநாளில் எனது வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.