#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காங்கிரசை விட்டு பாஜகவில் இணையும் பிரபல முன்னணி நடிகை?..! வாய்ப்பு கிடைக்காததால் ஆதங்கம்..! வெளியான அதிர்ச்சி தகவல்..!
முன்னணி நடிகை ஒருவர் பாஜக கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
90'களில் தமிழ், இந்தி போன்ற பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நக்மா. இவர் பிரபல நடிகை ஜோதிகாவின் சகோதரி. இவர் ரஜினி, கமல் போன்ற பல பிரபல நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். அத்துடன் தனது நடிப்புத் திறமையினால் ரசிகர்களை கட்டிப்போட்டு பிரபலமடைந்தவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு நக்மா காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின், உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அதில் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தார். பின் காங்கிரஸ் மகளிர் அணி பொதுச் செயலாளராக 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நிலையில், ராஜ்யசபா தேர்தல் வர இருப்பதால் தன்னை தேர்ந்தெடுப்பதற்கு கட்சித்தலைமை வாய்ப்பு வழங்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.
ஆனால், அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாமல் இருந்தது. இதன் காரணமாக கட்சிக்கென உழைக்கும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று நக்மா மிகவும் ஆதங்கத்தில் இருந்தார். இதனால் நடிகை நக்மா பாஜகவில் இணைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.