பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து பேச அனுமதி மறுப்பு..! த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் சாலை மறியல்..!!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ நேரில் சந்திக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தால் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தால், அவர்கள் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் இபிஎஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு எழும்பூர் ஆர்.ஆர்.ஸ்டேடியத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அங்கு வந்த நிலையில், அவர்களை நேரில் சந்தித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் எழவே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அமைந்துள்ள சாலையில், த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.