மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியா என்பது ஆங்கிலேயர் சூட்டிய பெயர்., ‘இந்தியா’வை ‘பாரத்’ என்று மாற்றிய அசாம் முதமைச்சர்..!!
இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் நம் நாட்டிற்கு சூட்டப்பட்ட பெயர் என்று அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா தெரிவித்துள்ளார்.
26 கட்சிகள் இணைந்து எதிர்க்கட்சியின் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இதனை விமர்சிக்கும் விதமாக அசாம் மாநில பாஜக முதலமைச்சர் அவரது ட்விட்டர் பதிவில் இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு சூட்டிய பெயராகும்.
நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராட்டம் நடத்தினார்கள். நாம் தொடர்ந்து பாரதத்தை காக்க உழைக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ள அவர், அவரது ப்ரொபைலில் உள்ள இந்தியா என்னும் வார்த்தையை மாற்றி பாரத் என்று பதிவு செய்துள்ளார்.