"முஸ்லிம்களின் சொத்துக்களை..." எம்புரான் திரைப்படத்திற்கு ராமதாஸ் கண்டனம்.! 



pmk ramadoss about empuran movie

பாமக நிறுவனர் ராமதாஸ் மோகன்லாலின் எம்புரான் திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார். 

பிரித்திவிராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாகிய எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27இல் தியேட்டர்களில் வெளியாகியது. லூசிபர் திரைப்படத்தின் இரண்டாவது பாகம்தான் இந்த எம்புரான் திரைப்படம். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் குஜராத்தில் நடைபெற்ற மத கலவரத்தை குறிப்பிடுவது போல ஒரு காட்சி இடம்பெற்று இருக்கின்றது.

pmk

எனவே, வலது சாரி அமைப்புகள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில், படத்தில் இடம்பெற்று இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுவதாக மோகன்லால் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: #Breaking: அதிமுக கூட்டணியில் மீண்டும் பாமக? ராமதாஸ் பச்சைக்கொடி?.. பரபரப்பு பேட்டி.!

இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து, "எம்புரான் திரைப்படத்தில் தமிழகத்திற்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் வக்பு வாரிய மசோதாவை பாமக ஆதரிக்கவில்லை. முஸ்லிம்களின் சொத்துக்களை அவர்கள் நிர்வாகம் செய்வதுதான் சரியானதாக இருக்கும்." என்று தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: #Breaking: அதிமுக கூட்டணியில் மீண்டும் பாமக? ராமதாஸ் பச்சைக்கொடி?.. பரபரப்பு பேட்டி.!