மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேஸ்புக்கில் அவதூறு பேசிய சீமான் தம்பி, துடைப்பத்தால் விரட்டி ஓடவிட்ட பெண்கள்.! குவிந்த போலீஸ்.!
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பிரபல நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சென்னை மாவட்ட காவல் ஆணையரிடம் மனு கொடுத்தனர். இந்த மனு கொடுக்கப்பட்டதை விமர்சித்த மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி பிரமுகரான செந்தில் மாதர் சங்கம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் படுமோசமாக விமர்சித்து இருந்தார்.
இந்த பதிவை பார்த்து கொந்தளித்த மயிலாடுதுறையை சேர்ந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்து பெண்கள் கையில் துடைப்பத்துடன் சென்று செந்திலின் வீட்டை முற்றுகையிட்டனர். இதனால் பயந்து போன செந்தில் வீட்டிற்கு பின்புறமாக சென்று ஓடி ஒளிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து மாதர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு செந்தில் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து, செந்தில் வீட்டிற்கு முன்பு துடைப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.